#Fuel price ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அதிகம்.. மோடி அரசை ‘பக்கா பங்கம்’ செய்த காங்கிரஸ்…

By manimegalai aFirst Published Nov 6, 2021, 9:31 PM IST
Highlights

ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகம் என்று  பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி பங்கம் செய்திருக்கிறது.

ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகம் என்று  பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி பங்கம் செய்திருக்கிறது.

இதுவரை இல்லாத அளவாக தீபாவளி கிப்ட்டாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஏகத்துக்கும் குறைத்து அதிரடி காட்டி இருக்கிறது மத்திய பாஜக அரசு. பெட்ரோல் கலால் வரி ரூ.5. டீசல் கலால் வரி ரூ.10 என அடித்து துவம்சம் செய்திருக்கிறது பாஜக.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அடுத்து வரக்கூடிய 5 மாநில சட்டசபை தேர்தலை நோக்கி தான் என்று எதிர்க்கட்சிகள் குறை கூறி உள்ளன. ஜெட் வேகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் ரேட் ஆகியவற்றால் ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் பெருத்த அடி விழுந்தது.

அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பாஜக சறுக்க.. அதிரடியாக விலை குறைப்பை அறிவித்து மக்களின் மனங்களில் உள்ள அதிருப்தியை ஈடுகட்ட முனைந்திருக்கிறது. அடுத்து வரக்கூடிய 5 மாநில சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டு தான் இந்த அறிவிப்பே என்று காங்கிரஸ் கூறினாலும் பெட்ரோல், டீசல் விலை என்பது கலால் வரியை குறைத்த பின்னரும் கூடுதலாக தான் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது காங்கிரஸ்.

இது குறித்து ஒரு ஒப்பீட்டு பட்டியலை தமது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஆசிய நாடுகளில் சிலவற்றில் தற்போது உள்ள பெட்ரோல், டீசல் விலைகளையும், இந்தியாவில் இப்போது இருக்கும் பெட்ரோல், டீசல் விலைகளையும் ஒப்பிட்டு (comparison) செய்து பார்த்திருக்கிறது.

ஆசிய கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளான இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலைகளை பட்டியலிட்டு உள்ளது.

அதில் நமது அண்டை நாடான இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.20 காசுகள். ஒரு லிட்டர் டீசல் ரூ.41.10 ஆகும். ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் ரூ.62.50, ஒரு லிட்டர் டீசல் ரூ.57.60 காசுகள் தான்.

வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் முறையே ரூ. 77.70 ஆகவும், ரூ. 56.80 ஆகவும் இருக்கிறது. சதா சர்வ நேரமும் இந்தியாவில் குழப்பம் விளைவிக்க காத்திருக்கும் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ60.10 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.58.70 காசாகவும் உள்ளது.

நேபாளத்தில் பெட்ரோல் ரூ.81.20 காசாகவும், டீசல் விலை ரூ.70.50 காசாகவும் விற்பனை ஆகிறது. பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.50 காசுகள். அதே ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.80.06 காசுகள்.

இப்படி ஒரு பட்டியலை ரிலீஸ் செய்துள்ள காங்கிரசானது இந்தியாவில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108. 42 காசுகளாகவும், டீசல் ரூ.100.18 காசுகளாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளது.

அதாவது ஏகபோகமாக சொல்ல வேண்டும் என்றால் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுடனான விலைகளை ஒப்பிட்டால் அப்படியே இந்தியாவில் 2 மடங்காக பெட்ரோல், டீசல் விலை உள்ளது என்பதாகும்.

இந்த விவரங்களை நச்சென்று குறிப்பிட்டு உள்ள காங்கிரஸ்… பாஜக பொய் சொல்லும்… ஆனால் இந்த எண்கள்(விலைகள் பட்டியல்) பொய் சொல்லாது என்று ஒரு கருத்தை பதிவிட்டு மத்திய பாக அரசை பங்கம் செய்திருக்கிறது.

இதுபோதாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு டுவிட்டர் பதிவை போட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

2021 இல் மட்டும் பெட்ரோல் 96 முறையும், டீசல் 98 முறையும், சிலிண்டர் விலை 9 முறையும்  உயர்ந்து உள்ளது. ஆசியாவிலேயே அதிக விலை விற்கும் அளவுக்கு உயர்த்திவிட்டு வெறும் 5 மற்றும் 10 ரூபாய் விலை குறைப்பும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக செய்யப்பட்டதாகும் என்று குறிப்பிட்டு உள்ளது.

விலை குறைப்பை எப்படி மக்கள் எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை அடுத்து வரும் நாட்கள் சொல்லிவிடும் என்றாலும் இதற்கு பாஜக தரப்பில் இருந்து பதிலடி எப்படி இருக்கும்? யார் தருவார்கள் என்ற கேள்வி தான் இப்போது எழுந்துள்ளது.

 

Remember, numbers don't lie, BJP does. pic.twitter.com/qZRoaygVOz

— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu)
 
click me!