தோளில் சவாரி செய்து சுகம் கண்ட கதர் சட்டைகள்...!! எப்படியாவது கழற்றிவிட திட்டம்போடும் திமுக... கதறலோ கதறல்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2020, 1:19 PM IST
Highlights

கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.   காங்கிரஸ் கட்சி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே  தவிர அது மிரட்டல் அல்ல 

திமுகவின் மீது காங்கிரஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதை தவிர அது மிரட்டல் அல்ல என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் விளக்கம் தெரிவித்துள்ளார் .  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் ,  தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது ,  ஆனால் உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை சொன்னபடி நடக்கவில்லை ,  திமுக மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைக்கவும் இல்லை  என ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும்,   தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டது . 

அதில்  திமுக தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புகள்  மறுக்கப்பட்டுள்ளது . மொத்தமுள்ள 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரையில் இரண்டு இடங்கள் மட்டுமே திமுக தலைமையால்  வழங்கப்பட்டுள்ளது .  27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில்  ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ , துணைத் தலைவர்  பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை .  இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் தெரிவித்திருந்தனர்.   இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் ப. சிதம்பரம் எழுதிய அச்சமில்லை அச்சமில்லை என்ற ஒரு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ,  கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.   காங்கிரஸ் கட்சி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே  தவிர அது மிரட்டல் அல்ல எனவும் கூறிய அவர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதை தாங்கள் விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

click me!