நெல்லை கண்ணனை விடாமல் துரத்தும் ஹெச்.ராஜா... பயங்கரவாதிகளில் கோர்த்துவிட்டு பங்கம்..!

Published : Jan 11, 2020, 12:00 PM IST
நெல்லை கண்ணனை விடாமல் துரத்தும் ஹெச்.ராஜா... பயங்கரவாதிகளில் கோர்த்துவிட்டு பங்கம்..!

சுருக்கம்

மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சோலிய முடிக்கச் சொன்ன நெல்லை கண்ணனுக்கு ஜாமின். தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. 

நெல்லையில் அண்மையில் நடைபெற்ற குடியுரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகியும், தமிழ் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசினார்.

 

இதுகுறித்த புகாரின் பேரில், பேச்சாளா் நெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீஸார் கைது செய்தனா். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று நெல்லைகண்ணன் சேலம் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக தேசிய ட்செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’செய்தி 1: இந்து முன்னணி நிர்வாகி பாடி சுரேஷ் கொலைவழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவான பயங்கரவாதிகள் 2 பேர் டில்லியில் கைது. மூன்றாவது நபர் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ கொலையில் தேடப்படும் குற்றவாளி.

செய்தி 2: மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சோலிய முடிக்கச் சொன்ன நெல்லை கண்ணனுக்கு ஜாமின். தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’எனப்பதிவிட்டுள்ளார்.

 

அதற்கு பதிலளித்துள்ள ஒருவர், 'மரியாதைக்குரிய ஹரி ஹர சர்மா அவர்களே உங்கள் ஆட்சியின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வியே இந்த தாக்குதலுக்கு காரணம்’’ என பதிலடி கொடுத்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!