திமுகவை கடுப்பாக்கிய காங்கிரஸ் !! குட்டையைக் குழப்பும் கமல்ஹாசனால் பனால் ஆகுமா கூட்டணி !!

By Selvanayagam PFirst Published Oct 21, 2018, 8:03 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைமையுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற  திமுக டீம், சீட் ஷேரிங்கில் உடன்பாடு ஏற்படவில்ல. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி,  மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவதாக வந்த தகவலையடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ஒரு பக்கம், தி.மு.க.,வுடன் உறவை தொடரும் அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன்  கூட்டணி அமைக்கவும், மறைமுக முயற்சி மேற்கொண்டுள்ளது. தி.மு.க., மீது கடுப்பில் உள்ள கமலும், காங்கிரஸ் இழுப்புக்கு சாயத் துவங்கியுள்ளார்.


இதனிடையே மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ரகசிய பயணமாக டெல்லி சென்று, காங்கிரஸ்  தலைவர்,ராகுலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு காரணமாக, காங்கிரஸ் மேல்  திமுக செம கடும்பில் உள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சிக்கு சிட் ஒதுக்க முடியும் என்று திமுக கறாராக  சொல்லிவிட்டதால் காங்கிரஸ் கட்சியும் கடுப்பில் உள்ளது.

இதைத்தொடர்ந்து தான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கமல்ஹாசனை கண்ணைமூடிக் கொண்ட ஆதரிக்க தயாராகிவிட்டனர்., தமிழக, காங்கிரஸ் ., தலைவர் திருநாவுக்கரசர் இது குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டார்.

திமுகவை விட்டு விலகி வந்தால் தான், காங்கிரசுடன் கூட்டணி' என, கமல் நிபந்தனை விதித்துள்ள தகவல் தெரிய வந்து உள்ளது.

ஏற்கனவே, காங்கிரசுடனான உறவில், அதிருப்தி அடைந்துள்ள, திமுகவினர், இப்போது, கமல் நிபந்தனையால், கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம், திடீரென்று டெல்லி சென்ற கமல், அங்கு, ராகுலை ரகசியமாக சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், சிவகங்கையில், நேற்று திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், ''கமல் வருகையை, நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில்,தி.மு.க.,வை விட்டு விலக வேண்டும் என்று, அவர் நிபந்தனை விதிப்பது, அவரது தனிப்பட்ட விருப்பம். தி.மு.க., வுட னான கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் தொடரும இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது என்பது தற்போது மில்லியின் மாலர் கேள்வியாக உள்ளது.

click me!