திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு !! அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி …

By Selvanayagam PFirst Published Oct 21, 2018, 6:10 AM IST
Highlights

திமுக பொதுச் செயலாளரும், அக்கட்சியின் மிக மூத்த தலைவருமான பேராசிரியர் க.அன்பழகனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வயது மூப்பு காரணமாக அன்பழகனுக்கு திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். 

 

திமுக கட்சியின் பொதுச்செயலாளராக  நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர்.  மறைந்த திமுகவின் தலைவர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர் அன்பழகன் என்பது குறிப்பிடத்தது.

click me!