
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் 104 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.கவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ், ம.ஜ.த எதிர்த்து வழக்கு போட்டது. விடிய விடிய நடந்த நீதிமன்ற விசாரணையில் இறுதியாக ஆளுநர் முடிவில் நீதிபதி தலையிட முடியாது என தெரிவித்து விட்டனர். கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளுநர் பா.ஜ.கவின் எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
மேகலயா, திரிபுரா, கோவாவிற்கு ஒரு சட்டம் கர்நாடகாவுக்கு ஒரு சட்டமா என பலரும் இச்செயலை கண்டித்து வருகின்றனர