ஆறு தொகுதிகளை கன்ஃபர்ம் பண்ணிய காங்கிரஸ் கட்சி … இன்னும் 3 தொகுதிகளுக்கு மீண்டும் பேச்சு வார்த்தை !!

By Selvanayagam PFirst Published Mar 9, 2019, 9:38 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 தொகுதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தென்காசி தொகுதி  மட்டும் காங்கிரசுக்கா அல்லது சிபிஎம்க்குகா ? என்ற குழப்பம் நிலவி வருவதாக தெரிகிறது.
 

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக,இடது சாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக 20 , காங்கிரஸ் 10, இடது சாரிகள் தலா 2. விசிக 2, இந்திய ஜனநாயக கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 , மதிமுக 1 , கொமதேக 1 என்று போட்டியிடுகின்றன.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் அழகிரி , அறிவாலயத்தில் திமுக குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்கனவே புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான பேச்சு வார்த்தைதான் இன்று நடைபெற்றது.

இதில் கன்னியாகுமரி,  விருதுநகர், கிருஷ்ணகிரி, கரூர் , சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி  உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் இன்னொரு சிட்டிங் உட்கார்ந்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி தொகுதியை கேட்பதால் அந்த தொகுதிக்கும் பதில் வட சென்னை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. நாளை மாலை அல்லது நாளை மறுநாளுக்குள் திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான அனைத்து தொகுதிகளும் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

click me!