இப்படி அண்ட புளுகு புளுகினால் எப்படி?... வண்டை வண்டையாய் கழுவி ஊத்தும் பொன்முடி...

By sathish kFirst Published Mar 9, 2019, 8:31 PM IST
Highlights

மறைந்த எங்கள் தலைவரை பார்க்க உங்க தம்பி சுதீஷையே அனுமதித்தபோது, விஜயகாந்த்தை பார்க்க அனுமதிக்காமல் இருப்போமா? இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பு உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. 

மறைந்த எங்கள் தலைவரை பார்க்க உங்க தம்பி சுதீஷையே அனுமதித்தபோது, விஜயகாந்த்தை பார்க்க அனுமதிக்காமல் இருப்போமா? இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பு உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. 

கடந்த சில நாட்களாக தேமுதிக திமுகவுக்கும் நடக்கும் சண்டை உலக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காதது என சொல்லலாம், ஆமாம்  வீட்டிற்கு வந்த தேமுதிக நிர்வாகிகள் சிலரை, துரைமுருகன் தரமான சம்பவம் செய்து அனுப்பியது அதிமுகவினரையும் ரசிக்கவைத்ததென்றே சொல்லலாம். 

ஒரே நேரத்தில் 2 இடங்களிலும் மாறி மாறி கூட்டணி பேரம் பண்ணிவந்த தேமுதிகவின் சுயரூபத்தை அறிந்த ஸ்டாலின் நான் ஊரில் இல்லை, எதுவானாலும் பொருளாளர் அண்ணன் துரைமுருகனிடம் பேசிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டதால், நேராக வலையில் சிக்கிய எலியாக தானாக வந்து சிக்கிக்கொண்டது தேமுதிக. விடுவாரா நக்கல் நாயகன், கலாய் மன்னன் துரைமுருகன்? தனக்கே உரிய ஸ்டைலில் செம்ம கலாய் கலாய்த்து அனுப்பியிருக்கிறார்.

இதில் ஹைலைட் என்னன்னா? அவருக்கு ஃபோன் பண்ணேன் லைன் சரியாக கிடைக்கலை. இதற்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அப்படினு ஒரு பொண்ணு  சொல்லிட்டு இருக்கு. அதுக்கப்புறமும் தொடர்பு கொண்டேன், தூங்குகிறார் என்றார்கள். நான் பரவாயில்லை எழுப்பி பேசும் அளவிற்கு இது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லன்னு சொல்லிட்டேன் என துரைமுருகன் மரனபங்கம் வாங்கினார்.

இதனால் ரெண்டு நாளாக வெளியில் தலைகாட்டாத தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும் விஜயகாந்த் மீதே கோபம் கொந்தளிக்க வைத்தது, காரணம் அரசியலில் கத்துக்குட்டியான இவர்களை கட்சிக்குள்ளே விட்டதால் வந்த வினை என தேமுதிகவினர் கூட கண்கலங்கினார்.  

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில்; "ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் கூட்டணி பேசியது தேமுதிகதான். அவர்களின் வாக்கு வங்கி என்ன என்பது அவங்களுக்கே தெரியும். விஜயகாந்தை கருணாநிதியை பார்க்க அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். சுதீஷை அனுமதிக்கும்போது விஜயகாந்தை நாங்கள் அனுமதிக்காமல் இருப்போமா? இப்படி அண்டப்புளுகு புளுகினால் என்ன நியாயம்?  அன்று தலைவர் ஸ்டாலினுடன் இருந்தவர்கள் நாங்கள்தான். அன்று என்ன நடந்தது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.  

click me!