லஞ்சம், ஊழல் செய்தே சொத்து சேர்த்துள்ளார் ஓ.பி.எஸ்.! ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார்!

 
Published : Dec 13, 2017, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
லஞ்சம், ஊழல் செய்தே சொத்து சேர்த்துள்ளார் ஓ.பி.எஸ்.! ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார்!

சுருக்கம்

Complain against O.Panneerselvam

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சொத்துகள் அனைத்தும் லஞ்சம், ஊழல் செய்து சேர்த்துள்ளவையே என்றும் அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்திடம், அறப்போர் இயக்கம் புகர் கொடுத்துள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது அறப்போர் இயக்கம் புகார் கொடுத்துள்ளது.

இந்த புகாரை, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் அளித்துள்ளார். இதன் பின்பு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2006 ஆம் ஆண்டில் இருந்து 20917 ஆம் ஆண்டு வரை ஓ.பன்னீர்செல்வம் குவித்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்திடம் கொடுத்துள்ளோம். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 20 லட்சம் மட்டுமே சொத்து கணக்காக காட்டியவர். எப்படி 106 ஏக்கர் நிலத்தை வாங்கினார்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த நிலம் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன்கள் பெயரில் உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான சுப்புராஜ், பன்னீர்செல்வத்தின் ஏழு ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தை பஞ்சாயத்துக்கு ஏன் கொடுத்தார்? என்றும் அவருடைய பின்னணி என்ன? என்றும் ஜெயராம் வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து விவரங்கள் போன்றவற்றை இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளோம் என்றார். இந்த சொத்துகள் அனைத்தும் லஞ்சம், ஊழல் செய்து ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துள்ளவையே என்றும் அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளதாக ஜெயராம் வெங்கடேசன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!