எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஆணுக்கு பெண் சமமாக மதிக்கின்ற பண்பு தமிழ்நாட்டில் இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் முயற்சியே ஆகும்.
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என பொய் பிரச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஆணுக்கு பெண் சமமாக மதிக்கின்ற பண்பு தமிழ்நாட்டில் இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் முயற்சியே ஆகும். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் தற்போது உருவாகவில்லை, உருவாகவும் முடியாது. ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது என்றார்.
மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என மாறு தட்டிக் கொண்டும், திமுகவின் மீது அதிருப்தி இருந்தும் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இரட்டை இலை இருந்தும், பணபலம் இருந்தும் அதிமுகவால் இன்று வெற்றி பெற முடியவில்லை என விமர்சனம் செய்துள்ளார். வரும் காலத்தில் அதிமுக ஒன்றிணையும். அதற்கான அறிகுறிகள் நன்றாகவே தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். ஏப்ரல் இறுதிக்குள்ளாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பணியை வேகப்படுத்தி வருகிறோம்.
undefined
1989ம் ஆண்டில் இருந்து அமைச்சராக இருக்கும் பொன்முடி பேசியபேச்சு காட்டு மிராண்டித்தனமாகவும் அனைத்து அரசியல்வாதிகளும் தலைகுனியும் அளவில் இருக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என பொய் பிரச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.