கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Feb 25, 2021, 11:03 AM ISTUpdated : Feb 26, 2021, 10:24 AM IST
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (89). வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.நேற்று அவரது உடல்நிலை திடீரென மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தற்போது, தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உள்ளன. இதனால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இதனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டியனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!