அடுத்து என்ன செய்யப்போகிறது அமமுக..? பரபரப்பை கிளப்பும் செயற்குழு- பொதுக்குழு..!

Published : Feb 25, 2021, 10:50 AM IST
அடுத்து என்ன செய்யப்போகிறது அமமுக..? பரபரப்பை கிளப்பும் செயற்குழு- பொதுக்குழு..!

சுருக்கம்

அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நேற்றைய தினம் அறிவித்தார் சசிகலா. இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழு –பொதுக்குழுவினை பலரும் எதிர்ப்பார்ப்புடன் நோக்குகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழுகூட்டம் தொடங்கியது.  காணொளி மூலம் நடைபெறுகிறது இந்த கூட்டம். கட்சியின் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றுள்ளார். சென்னை வேலூர் உள்ளிட்ட 10 மண்டலங்களில் நடைபெறுகிறது.

சட்டமன்ற தேர்தலில் அமமுகவை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நேற்று ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெ., படத்திற்கு மரியாதை செய்தார் சசிகலா. அப்போது இயக்குநர்கள் பாரதிராஜார், அமீர், நாம் தமிழர் கட்சியின் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் சசிகலாவை பாத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நேற்றைய தினம் அறிவித்தார் சசிகலா. இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழு –பொதுக்குழுவினை பலரும் எதிர்ப்பார்ப்புடன் நோக்குகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!