தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி.. ஹெலிகாப்டர் மூலம் புதுவை பயணம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2021, 10:45 AM IST
Highlights

இந்நிலையில் புதுச்சேரியில் சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் காரைக்காலில் 491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார், 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அவர் ஹெலிகாப்டரில்  புதுச்சேரிக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  அதேபோல தமிழகத்தில் 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். அதற்காக இன்று மாலை அவர் கோவை வருகை தர உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்காக பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றன. எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இந்நிலையில் புதுச்சேரிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் செல்ல உள்ளார். 

இந்நிலையில் புதுச்சேரியில் சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் காரைக்காலில் 491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார், மேலும் சாகர்மாலா திட்டம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழையாலான ஓடுதளம், ஜிப்மர் வர்த்தக மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியையும், புதுவை நகராட்சி கட்டிடத்தையும் திறந்துவைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் லாஸ்பேட்டை விளையாட்டு மைதானத்துக்கு வரும் அவர், அங்கு பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பொதுக் கூட்டம் முடிந்த பிறகு 1.20 மணிக்கு மோடி புதுவையிலிருந்து சென்னை புறப்படுகிறார். 

2:10 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் 3:35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அங்கு அவருக்கு தமிழக பாஜக மற்றும் அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட உள்ளது.  அதன்பின்னர் கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சுமார் 12,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் நெய்வேலியில் புதிய அனல் மின் திட்டத்தையும் நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  

click me!