ஓபிஎஸ் ஒழிக என முழக்கமிட்ட 50 பேர் கைது.. இருக்கைகளை தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2021, 11:02 AM IST
Highlights

தேனி மாவட்டம் போடியில் வா. உ .சியின் வெண்கல சிலை திறப்புவிழா நிகழ்ச்சியின் போது  ஓபிஎஸ் ஒழிக என்று கோஷம் இட்டு  இருக்கைகளை தூக்கி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்ததுடன்,  50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியில் வா. உ .சியின் வெண்கல சிலை திறப்புவிழா நிகழ்ச்சியின் போது  ஓபிஎஸ் ஒழிக என்று கோஷம் இட்டு இருக்கைகளை தூக்கி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்ததுடன்,  50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின்  அரை உருவ சிலையை மாற்றி அமைத்து புதிதாக முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. 

புதிதாக அமைக்கப்பட்ட வா.உ.சி யின் வெண்கல முழு உருவச் சிலையை  தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார். இதனிடையே சிலை திறப்பு நடந்து முடிந்த பின்பு அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வேளாளர் பட்டத்தை மாற்று சமூகத்தினருக்கு வழங்கியதை கண்டித்து  வேளாளர் சமுதாயத்தைச்  சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஐ ஒழிக என்று கோஷம் இட்டு சிலை திறந்ததிற்காக, அங்கே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக்  இருக்கைகளை தூக்கி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து அங்கு இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில்  போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட அக்கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரது தொகுதி மக்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டு கலவரத்தில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

click me!