#BREAKING இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு... வேட்பாளர்கள் பட்டியல் விரைவில்..!

By vinoth kumarFirst Published Mar 11, 2021, 12:35 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளை அக்கட்சியில் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளை அக்கட்சியில் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார். 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பார்வார்டு பிளாக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 தொகுதிகளில் 14 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனவே, திமுக போட்டியிடும் 174 பிளஸ் 13 தொகுதிகளையும் சேர்த்தால், உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது. 

இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், 

*  பவானிசாகர் (தனி)
*  வால்பாறை (தனி)
*  சிவகங்கை
*  திருப்பூர் வடக்கு
*  திருத்துறைப்பூண்டி (தனி)
*  தளி

ஆகிய 6 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன்;- பாஜக, அதிமுகவால் உருவாக்கப்பட்ட பிற அணிகள் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டி. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பிற அணிகளுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் இல்லை என கமல் குறித்த கேள்விக்கு முத்தரசன் பதிலளித்துள்ளார். 

click me!