தேமுதிகவினர் அநாகரீகமாக நடந்துகொண்டனர்.. கேப்டன் மைத்துனரை ஏறி அடித்த இல.கணேசன்.

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2021, 12:21 PM IST
Highlights

ஒட்டுமொத்த தெலுங்கு மக்களின் வாக்குகளும் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்கவேண்டும் என கோரினார்.  

பாஜக வேட்பாளர் பட்டியல் இரண்டு தினங்களில் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். அதன் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்-6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தீவிரங்காட்டி வருகின்றன.  இந்நிலையில் அதிமுக அதிரடியாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான பாஜக எப்போது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என்ற  எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில்,  சென்னை கீழ்பாக்கத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தெலுங்கு மக்களின் வாக்குகளும் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்கவேண்டும் என கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார். 

மேலும், தேமுதிகவினர் அரசியல் நாகரிகம் இன்றி அநாகரீகமாக பேசியுள்ளனர் என்றும், ஒவ்வொரு பேச்சுவார்த்தையின்போது சில மனக்கசப்புகள் ஏற்படுவது வழக்கம் தான் என்றும், இதுபோன்று நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் கூறினார். அதாவது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.சுதீஷ் கூட்டணிக்காக தங்களிடம் அதிமுகதான் கெஞ்சுகிறது, தேமுதிக ஒன்றும் கெஞ்சவில்லே என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இல.கணேசன்  தேமுதிகவை அவ்வாறு விமர்சித்துள்ளார். 
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜக  பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக நாடாளுமன்ற குழு கூடி, இன்னும் இரண்டு தினங்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும், என்றார்.  

 

click me!