அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது தாமாக..? அதிருப்தியில் ஜி.கே.வாசன்..!

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2021, 12:24 PM IST
Highlights

அதிமுக தலைமையிலான சட்டமன்றத்தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கிட்டத்த்தட்ட முடிந்து பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. 

அதிமுக தலைமையிலான சட்டமன்றத்தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கிட்டத்த்தட்ட முடிந்து பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தேமுதிக கூட்டணியில் இருந்து விலகி விட்டது. இந்நிலையில் தமாகாவுக்கு மட்டும் தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று முதன் முதலாக ஜி.கே.வாசன் தான் அறிவித்தார். அன்றிலிருந்து அதிமுக உடன் நட்பில் இருந்து வந்த ஜி.கே.வாசன் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 தொகுதிகளை கேட்டு வந்தார். முதன்முதலாக கூட்டணியை உறுதி செய்த தமாகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தான் அதிமுக தொடர்ந்து பேசிவந்தது.

இந்த கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு தமாகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். இதனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் 7 தொகுதிகளாவது தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது. நேற்று தமாகா எதிர்பாராத நிலையில் அதிமுக 171 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது.

அதிமுக இப்படி நடந்து கொண்ட விதம் தமாகாவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேலும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய முடியாது என்ற நிலைக்கு தமாகாவினர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜி.கே.வாசன் இன்று காலை மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டு வருகிறார். அதை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!