
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 22 ஆம் தேதி சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 75 நாட்களுக்கு பின், அவர் இறந்து விட்டார் என்ற செய்தி வெளியானது.
அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெ இறந்துவிட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது
இந்நிலையில், ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த நீண்ட இழுபறிக்கு பின் புதிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் எவ்வளவு காலகட்டத்திற்குள் இந்த விசாரணை முடியும் என தெளிவாக இன்னும் தெரியவில்லை .
EPS-OPS இணைப்பிற்கு முன்னரே ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப் படும் என முதல்வர் எடப்பாடி தெரிவித்து இருந்தார். பின்னர் இரண்டு அணிகளும் இணைந்த பின்னரே இன்று ஜெ மரணத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் தருவாயில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.