
100 நாட்களில் அரசியலுக்கு வருவேன் என்று தான் சொல்லவில்லை என்றும் ஆங்கில தொலைகாட்சிக்கு பேட்டியளித்ததை சரியாக மொழி பெயர்க்கவில்லை எனவும் நடிகர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கமலின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் தனியாக தேர்தலை சந்தித்து முதல்வராவேன் என கமல்ஹாசன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசியலுக்கு வந்து முதல்வராக வேண்டும் என நினைக்கும் கமல், டுவிட்டரில் மட்டும் செயல்பட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
மேலும், மக்களுடன் மக்களாக அவர்களுக்காக பணியாற்ற வேண்டும் எனவும் அப்பொழுதுதான் ஏற்பார்களே தவிர டுவிட்டரில் மட்டும் செயல்பட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் எனவும் வலியுறுத்தினார்.
முதலில் கமல் எம்.எல்.ஏ ஆகட்டும். பின்னர் பார்க்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கமல், 100 நாட்களில் அரசியலுக்கு வருவேன் என்று தான் சொல்லவில்லை என்றும் ஆங்கில தொலைகாட்சிக்கு பேட்டியளித்ததை சரியாக மொழி பெயர்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.