கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும், தற்காலிகப் பணி நியமனத்தில் ஏன் ஆர்வம்.. அண்ணாமலை ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2022, 3:41 PM IST
Highlights

தமிழக அரசின் அரசாணை 149ஐ நீக்கம் செய்து, ஆசிரியர் பணிக்காக, இப்போது நிரப்பப்படும் காலிப் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களை,  நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை பாஜக சார்பில் வேண்டி வலியுறுத்துகிறேன்.
 

தமிழக அரசின் அரசாணை 149ஐ நீக்கம் செய்து, ஆசிரியர் பணிக்காக, இப்போது நிரப்பப்படும் காலிப் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களை,  நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை பாஜக சார்பில் வேண்டி வலியுறுத்துகிறேன். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்காக இருக்கிறார்கள். இவர்களில் முதல் முறையும், இரண்டாவது முறையும், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: பிரபல ஒட்டல் கழிவறைக்கு சென்ற பெண்.. இளைஞர் செய்த காரியத்தால் அதிர்ச்சி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

மாநில அரசின் அறிவுரைப்படி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிவிட்டு 30 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதியுடன், பணிக்காக காத்திருக்கும் போது, இவர்களையெல்லாம் பணி நியமனம் செய்யாத அரசு, தற்போது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை கொண்டு ஆசிரியர் பணி இடங்களையெல்லாம்  நிரப்பப்போவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளும் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் 177வாக்குறுதியாக சொல்லியது என்ன? ” 2013ஆம் ஆண்டு முதல் TET தேர்வெழுதி தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று வாக்களித்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் TET ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கும் போது தற்காலிக பணி நியமனம் எதற்காக செய்ய வேண்டும்?. 

இதையும் படியுங்கள்: ஜூலை 11ஆம் தேதி நடைபெறுவது பொதுக்குழு கூட்டமல்ல.? இபிஎஸ்யின் புகழ் பாடும் கூட்டம்..! மாவட்ட செயலாளர் விமர்சனம்

கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும், தற்காலிகப் பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்? ஆகவே மாநில அரசு, கல்வித் துறையின் அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு தகுதிவாய்ந்த  TET தேர்வெழுதி தகுதி பெற்று பணிக்காக இருக்கும் இளைஞர்களை, அந்த பணியிடங்களில் முறைப்படி காலமுறை ஊதியத்துடன் நியமிக்க வேண்டும். ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றை கனவுடன் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணி நியமன ஆணைக்காக பரிதாபத்துடன் காத்திருக்கும் இளைஞர்களும் பெண்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை.: நீங்கள் கொடுத்த வாக்கை, நீங்கள் சொன்ன சொல்லை, நீங்கள் மக்களுக்குத் தந்த உத்தரவாதத்தை, நீங்கள் சொன்ன உறுதி மொழியை உங்களால் நிறைவேற்ற முடியாதா? ஆக்கமும் கேடும் வாக்கால் வருதலால்… அதைக் காத்தோம்பல் நலம். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நம் மாநில அரசு இந்த வாக்குறுதியையாவது, நிறைவேற்ற வேண்டும். தமிழக மாணவர்களின் கல்வியோடு தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!