பிரச்சாரத்திற்கு வரவா..? நோ சொன்ன அதிமுக... கண்ணீர் விட்டுக் கதறிய குஷ்பு..!

Published : Mar 18, 2021, 10:29 AM IST
பிரச்சாரத்திற்கு வரவா..? நோ சொன்ன அதிமுக... கண்ணீர் விட்டுக் கதறிய குஷ்பு..!

சுருக்கம்

நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டாலும், 'அருகில் உள்ள சில தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்கிறேன்' எனக் கேட்டிருக்கிறார். 


நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டாலும், 'அருகில் உள்ள சில தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்கிறேன்' எனக் கேட்டிருக்கிறார். ஆனால் அதிமுகவிடம் பாஜக 'கூட்டணி கட்சிகளுக்காக எங்கள் நட்சத்திரப் பட்டாளத்தை அனுப்பவா?' எனக்  கேட்டுள்ளது. அதற்கு பெரிய கும்பிடு போட்டு, வேண்டாம் என மறுத்துள்ளது அதிமுக. இதனால், பா.ஜ.க., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் நட்சத்திர பட்டாளத்தை களமிறக்க முடிவு செய்துள்ளது பாஜக தலைமை.

 

இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுகம் இதையொட்டி, நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குஷ்பு பங்கேற்றார். அப்போது மிகவும் உணர்ச்சி ததும்ப பேசினார் குஷ்பு. ’’நான் வெற்றி பெற வேண்டும் என்று எனது தாய், கடவுளை வேண்டி வருகிறேன். தாய் இல்லாமல் நான் இல்லை. கொஞ்சம் கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது தாய்தான் சிறு வயதிலிருந்து என்னை வளர்த்தார்.

 காங்கிரஸ் அதற்கு முன்பு திமுகவில் இருந்தபோது, போட்டியிட சீட் கேட்கவில்லை. பாஜகதான் எனக்கு சீட் தந்து கவுரவித்துள்ளது’’ எனப்பேசிய குஷ்பு கண்ணீர் விட்டு அழுதார்.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!