தெருநாய்களை பராமரிக்க முன்வாருங்கள்.. கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி.

Published : Sep 29, 2021, 12:50 PM ISTUpdated : Sep 29, 2021, 12:52 PM IST
தெருநாய்களை பராமரிக்க முன்வாருங்கள்.. கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி.

சுருக்கம்

சாலையோரங்களில் பராமரிப்பின்றி தவிக்கும் செல்லப்பிராணிகளை பராமரிக்க அனைவரும் மனமுவந்து முன்வர வேண்டுமெனவும், அவைகள் நம்மிடம் அன்பை  எதிர்பார்க்கிறது என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சஞ்சீவ் பானர்ஜி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.  

சாலையோரங்களில் பராமரிப்பின்றி தவிக்கும் செல்லப்பிராணிகளை பராமரிக்க அனைவரும் மனமுவந்து முன்வர வேண்டுமெனவும், அவைகள் நம்மிடம் அன்பை  எதிர்பார்க்கிறது என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சஞ்சீவ் பானர்ஜி கண்ணீர் மல்க பேசியுள்ளார். கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த மனித குலத்தையும் கபளீகரம் செய்துள்ளது. தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளையும் கடுமையாக பாதித்துள்ளது. ஊரடங்கு காரணமாக சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வந்தநிலையில், அவற்றையெல்லாம் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றமே முன்வந்து உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சாலையோரம் பிராணிகளுக்கு உணவு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் ரேபிஸ் நோய்த்தடுப்பு தினத்தையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி இன்று துவக்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய அவர் கூறியதாவது, சீட்டுக்கட்டுகளில் ஜோக்கர் இருப்பதே சிறந்தது என்றும் அந்த சீட்டுக்கட்டுகளில் உள்ள ஜோக்கர்கள் நாம்தான் என்றும் கூறினார். கடந்த 16- 18 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோர பிராணிகள்,விலங்குகளை நாம்  புறக்கணித்து வாழ்ந்து வருகிறோம் என்று கூறிய அவர், விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசி அவர், தனது வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வை பகிர்ந்து கொண்டார், தானும் தனது மனைவியும் கல்கத்தாவிலிருந்து சென்னைக்குப் ஜனவரியில் சாலை மார்க்கமாக வந்த போது சாலையிலுள்ள செல்லப்பிராணிகள் தங்களுடன் வந்ததாகக் குறிப்பிட்டார். அப்போது குழந்தை போன்று தாங்கள் வளர்த்த செல்ல பிராணி நாய் 13.5 வயதில் சென்னை வந்தவுடன் இறந்ததாகவும் கூறினார், அதன் வயது மனிதனின் 92 வயதுக்கு சமம் என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார். அந்த செல்லப்பிராணி உயிரிழுந்தவுடன் பலரும் வளர்ப்பதற்கு நாய்களைகொடுத்ததாகவும், ஆனால் அதை வளர்க்காமல் தெரு நாய்களை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே படித்தவர்கள் சாலையோர நாய்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றும் விலங்குகள் நம்மிடம் அன்பை எதிர் பார்க்கிறது, ஆனால் அதை நாம் புரிந்து கொள்வதில்லை என்றும் கண்ணீருடன் பேசினார். அவரின் பேச்சு அங்கிருந்த பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!