கவர்மெண்ட் பஸ்ஸில்  போகும் கலெக்டர்! தமிழ்நாடுதானா இது?: பொதுமக்களின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளும். 

First Published Dec 9, 2017, 7:39 PM IST
Highlights
collector travel by govt bus in cuddalur


அரசின் ஏதோ ஒரு அம்மாஞ்சி துறையில் உதவியாளர் பதவியிலிருக்கும் சுனா பானாவே ‘எனக்கு பின்னாடி கவர்மெண்டே இருக்குது’ என்றபடி ஓவர் சீன் போடும் காலம் இது. இந்த சூழலில் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் ‘மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி’யுடன் நடந்து கொள்கிறாராம். 

அவரது நடவடிக்கைகள், அரசுத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கடுப்பாகவும், சமீபத்தில் இணைந்திருக்கும் இளம் அரசு அலுவலர்களுக்கு உத்வேகம் தருவதாகவும் இருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். 

கலெக்டர் பிரசாந்தின் நேர்மறை நடவடிக்கைகளில் ஹைலைட்ஸ் இதோ...

* மனு நீதி நாள் முகாமில் பங்கேற்க அரசு அதிகாரிகளுடன் பஸ்ஸில் சென்றிருக்கிறார்.

* மனு நீதி நாள் முகாம் நடக்கும் இடங்களுக்கு பஸ்ஸில் செல்ல, காலை 8 அணிக்கு முன்னதாக அலுவலகத்துக்கு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுருத்தியிருக்கிறார்.

* அரசு தனக்கு அளித்திருக்கும் இனோவா காரை பயன்படுத்தாமல், எளிமையாக அம்பாசிடர் காரையே பயன்படுத்துகிறார். 

* அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில், தகுதியான நபர்களுக்கு பணி கொடுத்து, ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் நடந்திருக்கிறார்.

* அரசு பள்ளிகளுக்கு சென்று அடிக்கடி ஆய்வு நடத்துவது, தானே பாடம் எடுப்பது என்று பொறுப்பு காட்டுகிறார். 

* மனு நீதிநாள் முகாமுக்கு அரசு பஸ்ஸில் சென்று, பணி முடிந்ததும் அரசு பஸ்ஸிலேயே அலுவலகம் வருகிறார்.

* காரில் சென்றால் அதிக செலவாகும் என்பதால் பஸ்ஸில் செல்வதோடு, தன்னுடன் வரும் அதிகாரிகளுக்கான பயண செலவை அரசு ஏற்கிறது.

இவரைப் பார்த்து மற்ற மாவட்ட உயரதிகாரிகளும் திருந்துவார்களா? என்று பொதுமக்கள் எண்ணும் அதேவேளையில் பிரசாந்த் என்றுமே இப்படி எளிமை வாழ்க்கையை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள்.

click me!