குஜராத் தேர்தல்: ‘களை கட்டும் சூதாட்டம்’......பா.ஜனதா வெற்றி பெற்றால் 7 மடங்கு; காங்கிரசுக்கு 3 மடங்கு

 
Published : Dec 09, 2017, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
குஜராத் தேர்தல்: ‘களை கட்டும் சூதாட்டம்’......பா.ஜனதா வெற்றி பெற்றால் 7 மடங்கு; காங்கிரசுக்கு 3 மடங்கு

சுருக்கம்

gambling in Gujarat... congress or bjp

குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், அங்கு யார் வெற்றி பெறுவார்கள் ? என்று கணிக்கும் சூதாட்டம் களை கட்டியுள்ளது. 

பா.ஜனதா கட்சி மீது பணம் கட்டுபவர்களுக்கு 7 மடங்கு பணமும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் 3 மடங்கு பணமும் வழங்கப்படும் என சூதாட்டதரகர்கள் கவர்ச்சிகர அறிவிப்புகளை கூறியிருக்கிறார்கள் என ‘ஏ.பி.பி.’ சேனல் செய்தி வௌியிட்டுள்ளது. 

முதல்கட்ட வாக்குப்பதிவு
குஜராத் மாநிலத்தில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் முதல்வர் விஜய் ரூபானி(மேற்கு ராஜ்கோட்), காங்கிரஸ் கட்சியின் சக்திசிங் கோகில்(மான்ட்வி), பரேஷ் தனானி(அம்ரேலி) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14-ந்தேதி நடைபெற உள்ளது.

கருத்துக்கணிப்பு

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சூதாட்ட தரகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  அதற்கு ஏற்றார்போல், பா.ஜனதா கட்சி  101 இடங்கள் முதல் 103 இடங்கள் வரையில் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 71 இடங்கள் முதல் 73 இடங்கள் வரையில் பெறும் என்றும் ஏ.பி.பி. அமைப்பு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 

பா.ஜனதாவுக்கு ‘ரேட்’

இந்நிலையில், இந்த தேர்தலில் பா.ஜனதா , காங்கிரஸ் வெற்றிக்கு தனித்தனியாக ‘ரேட்டை’ சூதாட்டக்காரர்கள் நிர்ணயித்துள்ளனர்.

இதில் பா.ஜனதா கட்சி மீது பணம் கட்டுபவர்களுக்கு 3 விதமான தொகையை சூதாட்டக் காரர்கள்நிர்ணயித்துள்ளனர். அதாவது, பா.ஜனதா கட்சி 110 இடங்கள் வரை கைப்பற்றினால், ஒரு ரூபாய்க்கு ரூ.1.50 காசுகள் வீதமும், 125 இடங்கள் கைப்பற்றினால், ஒரு ரூபாய்க்கு ரூ.3.50 வீதமும், 150 இடங்கள் பெற்றால் ஒரு ரூபாய்க்கு 7 ரூபாயும் கிடைக்கும் என கூறுகின்றனர்.

காங்.க்கு எவ்வளவு?

அதேசமயம், காங்கிரஸ் கட்சி 99 முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு ரூபாய்க்கு 3 ரூபாயும், 75 இடங்களைக் கைப்பற்றினால் ஒரு ரூபாய்க்கு ரூ. 1.10 காசுகளும் கிடைக்கும் என சூதாட்டக்காரர்கள் நிர்ணயித்துள்ளனர்.

இது போல, பா.ஜனதா கட்சி பெறும் ஒவ்வொரு இடத்துக்கு 50 காசுகளும், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 ரூபாயும் தனியாக நிர்ணயித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..