அப்போலோ மருத்துவமனை எந்த காரணத்திற்காக ஜெயலலிதாவை காப்பாற்ற வில்லை. தமிழக முதல்வர் தயவு தாச்சியம் பார்க்கமால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போலோ மருத்துவமனை 6 கோடிக்கு பில் மட்டுமே போட்டார்கள், ஜெயலலிதாவை காப்பாற்றவில்லை.
அப்போலோ மருத்துவமனை 6 கோடிக்கு பில் மட்டுமே போட்டார்கள், ஜெயலலிதாவை காப்பாற்றவில்லை. ஆணைதை பிணமாக கொன்று விட்டார்கள். அப்பல்லோ மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என கோவை செல்வராஜ் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரி இல்லாத நேரத்தில் அவர்களை வெளிநாடு அழைத்து சென்று மேல்சிகிச்சை தரவில்லை இதற்கு முழு பொறுப்பும் அந்த நேரத்தில் அமைச்சராக இருந்த அனைவரும் தான்.
இதையும் படிங்க;- ஜெயலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது தெரியுமா? சசிகலா கூறிய பரபரப்பு வாக்குமூலம்..!
ஜெயக்குமார் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லி ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஏன் அழுத்தும் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் தலைமை செயலாளர், மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் கலந்து பேசி வெளிநாட்டுக்கு அழைத்து சென்று இருக்காலாம். அப்பல்லோ மருத்துவமனை ஒழுங்காக சிகிச்சை அளிக்கவில்லை, நல்ல முறையில் சிகிச்சை கொடுத்து இருந்தால் 15 வருடங்கள் அவர் நன்றாக இருந்து இருப்பார்கள். அவர்களை கொள்ள வேண்டும் என்பதற்காக தான் மருத்துவமனை இனிப்பு வகைகளை கொடுத்ததா???? என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவிற்கு அதிக அளவில் இனிப்புகள் ஐஸ்கிரீம் தந்து அவர்களை சித்திரவதை செய்து அவரை கொடூரமாக கொன்று இருக்கிறார்கள் எனக் கூறினார்.
அப்போலோ மருத்துவமனை எந்த காரணத்திற்காக ஜெயலலிதாவை காப்பாற்ற வில்லை. தமிழக முதல்வர் தயவு தாச்சியம் பார்க்கமால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போலோ மருத்துவமனை 6 கோடிக்கு பில் மட்டுமே போட்டார்கள், ஜெயலலிதாவை காப்பாற்றவில்லை. ஆணைதை பிணமாக கொன்று விட்டார்கள். அப்பல்லோ மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எந்த நிலைமை ஏற்படும் என்றும் அப்போலோ மருத்துவமனையை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஓ.பி.எஸ், வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் கூறினார் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் வெளிநாடு செல்ல ஒத்துழைக்கவில்லை என்றும் அப்போது ஓ.பி.எஸ், சொல்லை அமைச்சர்கள் யாரும் கேட்கவில்லை. இதயம் தெய்வம் என்ற வார்த்தையை எடப்பாடி உள்ளிட்ட யாரும் இனி சொல்ல வேண்டாம். மரத்தில் துணியை சுற்றி வைத்தால் கூட ஆனர்ந்து பார்ப்பவர் தான் ஜெயக்குமார் அவர் ஒரு புரோக்கர் என கோவை செல்வராஜ் பங்கமாக கலாய்த்தார்.
இதையும் படிங்க;- ஊர்ந்து சென்று பதவி பெற்று நம்பிக்கை துரோகம் செய்தது யார்..? இபிஎஸ்யை இறங்கி அடித்த ஓபிஎஸ்