இரண்டு அறிக்கைகள் குறித்து EPS வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக இருக்கு.. கொதிக்கும் கோவை செல்வராஜ்

By vinoth kumar  |  First Published Oct 22, 2022, 2:30 PM IST

சுகாதாரத்துறை அமைச்சராக  இருந்த விஜயபாஸ்கர் வாயை திறக்கவே இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்த போது அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்த இரு நீதிபதிகளின் அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு பக்கம் சசிகலா இரண்டு பேருமே இந்த இரண்டு அறிக்கைகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணை அறிக்கையும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையும் வெளி வந்து 6 நாட்கள் ஆகிறது. இந்த 2 சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதல்வருக்கு கோவை செல்வராஜ் நன்றி தெரிவித்தார். 

இரண்டு அறிக்கையும் வெளிவந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தூத்துக்குடி சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி சொல்கிறார். இபிஎஸ் உள்ளிட்ட தவறு செய்தவர்கள் மீது தனி நீதிபதியை அமைத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர் சினிமா போஸ்டர் ஒட்டி கொண்டு இருந்தவர்களை அதிமுகவில் அமைச்சர்களாக ஆக்கியவர் ஜெயலலிதா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரி இல்லாத நேரத்தில் அவர்களை வெளிநாடு அழைத்து சென்று மேல்சிகிச்சை தரவில்லை. இதற்கு முழு பொறுப்பும் அந்த நேரத்தில் அமைச்சராக இருந்த அனைவரும் தான் என குற்றச்சாட்டை  முன்வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக  இருந்த விஜயபாஸ்கர் வாயை திறக்கவே இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்த போது அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். 

click me!