கோட்டு சூட்டு போட்டு கலக்கும் எடப்பாடி... கதிகலங்கி போயுள்ள எதிர்க்கட்சிகள்..!

Published : Aug 29, 2019, 03:19 PM IST
கோட்டு சூட்டு போட்டு கலக்கும் எடப்பாடி... கதிகலங்கி போயுள்ள எதிர்க்கட்சிகள்..!

சுருக்கம்

லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டு சூட்டு போட்டு கலக்குவதால் எதிர்கட்சிகள் கதிகலங்கிப் போயுள்ளனர்.  

லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டு சூட்டு போட்டு கலக்குவதால் எதிர்கட்சிகள் கதிகலங்கிப் போயுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது.
 
லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு  ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் பணி தரத்தை மேம்படுத்த சர்வதேச மனித மேம்பாட்டுத் துறையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டு சூட்டு போட்டு இருந்தார். 

எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு போய் எதையும் சாதிக்கப்போவதில்லை ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன. அவர்களின் வாயை அடைக்கும் வகையில் சென்ற மறு நாளே லண்டனில் இரண்டு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டது எதிர்கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!