பாஜகவை வீழ்த்திய கூட்டணி! ஓய்ந்ததா மோடி அலை? அஸ்திவாரத்தையே அதிரவைத்த உ.பி தேர்தல்...

First Published Mar 14, 2018, 5:05 PM IST
Highlights
Coalition to defeat BJP Waning Modi wave UP election that stabbed the foundation


உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் கடந்த 11ம் தேதி நடந்தன. இந்த தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  மூன்று தொகுதிகளிலுமே பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என எதிர்கட்சிகள் தாறுமாறாக கலாய்த்து  வருகின்றனர்.

பாஜகவிற்கு ஏற்பட்ட இந்த பெரும் சரிவிற்கு காரணம் என்ன?

இதனால் அம்மாநில முதல்வர் யோகி இவ்வளவு நாட்களாக செய்து வந்த வெறுப்பரசியல் மக்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை  என சொல்லலாம். கடந்த ஒரு ஆண்டுகாலமாக ஆட்சி நடத்திய யோகி காவி கலரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் பெரியதாக  வரவேற்பு இல்லை.

அதுமட்டுமல்ல, யோகி அரசு கடந்த ஒரு வருடத்தில் 1,038 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ஒரு நாளைக்கு 4 பேர் மரணம் கொள்ளப் படுகிறார்கள்.

இந்த என்கவுண்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள்.  இதில் கோரக்பூரில்தான் அதிகமாக என்கவுண்டர் நடத்தப்பட்டுள்ளது. யோகி நீண்ட காலமாக அந்த மக்கள் ஆதரவளித்து வந்தாலும் அங்குதான் அதிகமாக என்கவுண்டர் நடந்திருக்கிறது. இந்த கொடூரத்தாக்குதளுக்கு ஆளானதும் கொள்ளப்பட்டது இஸ்லாமியர்களும், தலித்துகளும்தான். இந்த கொலையில் 14ல் 13பேர் இஸ்லாமியர்கள் என்பது உறையவைக்கும் உண்மை.

இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக தலித்துகள் அதிகமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த யோகியின் இந்த ஆட்சியில் நடந்ததற்கு தேர்தலில் பரிசாக கிடைத்துள்ளது.

இப்பட கடந்த ஒரு வருட ஆட்சியில் நடந்ததற்கு சரியான சூடு போட முடிவு செய்தது முக்கிய கட்சிகள். அதாவது தமிழத்தில் திமுக அதிமுகவைப்போல இருக்கும் மிகப்பெரும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்வாதியும் தங்களுக்குள் இருந்த சுமார் முப்பது வருடங்களாக இருந்த சாதிப் பிரச்சனைக்கு சுபம் போடா முடிவெடுத்தது.

இதனையடுத்து, தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை அறிவிக்கபோவதில்லை என அறிவித்தது அதேநேரத்தில், சமாஜ்வாதி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாயாவதி பேட்டியளித்தார். இந்த இடைத்தேர்தலின் மறைமுகக் கூட்டணி மூலம் சமாதானமாக ஆனதாக கருதப்படுகிறது.

இது மறைமுகமாக கூட்டணி அமைத்திருந்தாலும் வரவிற்குக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடரும் என்பதால் பாஜகவின் தொடர் வெற்றியில் பெரிய இடி விழுந்து இருக்கிறது.

கோரக்பூரில் இருக்கும் பாஜகவை வீழ்த்தியது இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளில் வாக்குகள் மட்டுமல்ல பெரும்பாலான மக்களின் வாக்குகள் பாஜக கட்சிக்கு எதிராக விழுந்து இருக்கிறது. அதனால் தான் தற்போது சமாஜ்வாதி கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

click me!