பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு; மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

First Published Mar 14, 2018, 3:34 PM IST
Highlights
BSNL. Abuse cas Maran brothers release


பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் அந்த 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07 ஆண்டுகளில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில் அரசுக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டது. அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்தது

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைப்பேசி இணைப்புகள் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் மாறன் சகோதரர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டார்.

இதனால் அரசுக்கு ஒருகோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.

கடந்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி நடராஜன் இதற்கான தீர்ப்பு மார்ச் 14 ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி, இன்று மதியம் 2.30 மணிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

click me!