
அம்மா பக்தர்களுக்கு சந்தோஷமான செய்தி ஜெயலலிதா நலமடைந்து விட்டார் விரைவில் வீடு திரும்புகிறார் என சுப்ரமணியம் சாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தொடர்ந்து அவருக்கு எதிராக கருத்துக்களை கூறி வருபவர் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி .
முதல்வர் உடல் நலத்தை விமர்சித்து தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என டுவிட்டரில் தொடர்ச்சியாக பதிவு செய்து விமர்சனத்திற்கு ஆளானவர்.
முதல்வர் உடல் நலம் தேறி வருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்த போது அதற்கு மாறாக கருத்து தெரிவித்தவர் சுப்பிரமணியம் சுவாமி .
ஆனால் தற்போது முதல்வர் முழுமையாக உடல்நலம் தேறி தீபாவளிக்குள் வீடு திரும்ப வாய்ப்பு உண்டு என்ற செய்தி வெளியாகி உள்ள நிலையில் அதை மெய்பிக்கும் வண்ணம் சுப்பிரமணியம் சுவாமியே கருத்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியம் சுவாமி , அம்மா பக்தர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி முதல்வர் ஜெயலலிதா நினைவு திரும்பி நன்றாக குணமடைந்து விட்டதாக தெரிந்து கொண்டேன். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் . அப்படி நடந்தால் அது மருத்துவ அதிசயம் என்று தெரிவித்துள்ளார்.