திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பொதுமக்களை மிரட்டுவது சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயம் என்றிருக்கும் நிலையில் கோவை மேயர் விஷயத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை திமுக மேயர் குறித்து மாநில அரசு தீவிரமாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை பீளமேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்:- தமிழக முதல்வர் ஓணம் திருநாளில் மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருப்பதை வரவேற்பதாகவும் அதே வேளையில் தீபாவளிக்கு கூட இதுபோல் முதல்வர் வாழ்த்து கூறினால் அனைவருக்குமான முதல்வராகவும் செயல்படுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும் என்றார். ஓணம் பண்டிகைக்கு மாகாபலி சக்கரவர்த்தியின் கதை இருப்பது போல் தீபாவளிக்கும் ஒரு புராணக்கதை இருக்கிறது எனவும் ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் எங்களுடைய எதிர்பார்ப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.
undefined
கோவை திமுக மேயர் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி ஒரு அதிகாரம் வாய்ந்த பொறுப்பு மிக்கவர் மேயர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது இதுபோன்ற புகார் தெரிவிப்பது என்பதை மாநில அரசு தீவிரமாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பொதுமக்களை மிரட்டுவது சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயம் என்றிருக்கும் நிலையில் கோவை மேயர் விஷயத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேபோல் ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது யார் யாருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இருக்கின்றதோ அதை வைத்து தான் மத்திய அரசின் ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகையால் அந்த கட்சி இந்த கட்சி என எந்த பாகுபாடும் இல்லை. ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என வானதி சீனிவாசன் கூறினார்.