சென்னை வியாசர்பாடியை பிரியா (17). சிறு வயது முதலே முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
சென்னையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியை பிரியா (17). சிறு வயது முதலே முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க;- என் மகளை கொன்னுட்டாங்க.. அவங்கள சும்மா விடாதீங்க.. கதறும் பிரியாவின் தந்தை..!
undefined
இந்நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்தத 7ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகும் வலி குறையவில்லை. கால் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் மண்ணோடு மண்ணா போச்சு.. டாக்டர்கள் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை பிரியா பலி.!
இதனையடுத்து, எதோ சாக்கு போக்கு சொல்லி உடனே மேல்சிகிச்சைக்காக பிரியா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர், ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு மருத்துவர்களின் தவறான சிகிச்சை தான் காரணம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
மேலும், உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்நிலையில், உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பிரியாவின் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பார்வையிட்டார். இதனையடுத்து, அரசு சொன்னது போல ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு சார்பாக வீடு ஒதுக்கியதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க;- கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபரப்பு தகவல்..!