மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி வைத்தார்.
மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால், பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டது. டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6000/- பெற்றுக்கொள்ளளாம். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- ரூ.6,000 நிவாரணத் தொகை டோக்கன் கிடைக்கவில்லையா? அப்படினா உடனே இதை செய்யுங்கள்..!
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.