சமூக நீதிக்கு கிடைத்த 3 வது வெற்றி.. இது திராவிட மாடல் ஆட்சி.. சட்டப்பேரவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..

Published : Apr 07, 2022, 12:40 PM IST
சமூக நீதிக்கு கிடைத்த 3 வது வெற்றி.. இது திராவிட மாடல் ஆட்சி.. சட்டப்பேரவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..

சுருக்கம்

7.5% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதியை காக்கும் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த 3வது வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

மருத்துவம்‌ மற்றும்‌ தொழிற்கல்வி படிப்பில்‌ அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுத்தொடர்பாக் இன்று பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2020- 2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப்‌ படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கையில்‌ 7.5 சதவீதம்‌ ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும்,  திமுக ஆட்சிப்‌ பொறுப்பேற்ற பிறகு தான், தொழிற்கல்வி படிப்புகளில்‌ இந்த இட ஒதுக்கீடு முறை பின்பற்ற உத்தரவிடப்பட்டது என்றார்.

மேலும் பேசிய அவர்,  டெல்லி உயர்நீதிமன்ற மேனாள்‌ முருகேசன்‌‌ தலைமையில்‌ ஆணையம்‌ அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையின்படி , அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்களுக்கு, அனைத்து இடஒதுக்கீட்டுப்‌ பிரிவுகளிலும்‌ 7.5 சதவீதம்‌ இடங்கள்‌ முன்னுரிமையின்‌ அடிப்படையில்‌ ஒதுக்கீடு செய்ய, அரசால்‌ 2021ஆம்‌ ஆண்டு,  “இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச்‌ சட்டம்‌”இயற்றப்பட்டது என்று தெரிவித்தார்.

இட ஒதுக்கீட்டின் மூலம் தொழிற்கல்லூரிகளில்‌ சேரக்கூடிய மாணவர்களின் கல்விக்‌ கட்டணம்‌, விடுதிக்‌கட்டணம்‌, கலந்தாய்வுக்‌ கட்டணம்‌ உள்ளிட்ட அனைத்தையும்‌ இந்த அரசு ஏற்றுக்‌கொள்ளும்‌ என்று அறிவிப்பை இந்த அரசு வெளியிட்டது என்று கூறிய முதலமைச்சர்,  அந்தவகையில்‌, படிப்புக்‌ கட்டணம்‌ வழங்குவதற்காக 45 கோடியே 61 இலட்சம்‌ ரூபாயும்‌, விடுதிக்‌ கட்டணத்திற்காக 25 கோடியே 32 இலட்சம்‌ ரூபாயும்‌, போக்குவரத்துக்‌ கட்டணத்திற்காக, 3 கோடியே 35 இலட்சம்‌ ரூபாயும்‌, ஆக மொத்தம்‌ 74 கோடியே 28 இலட்சம்‌ ரூபாய்‌ அரசால்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன என்றார்.

மேலும் 2022- 23 ஆம் கல்வியாண்டில்‌, 7 ஆயிரத்து 876 மாணவர்கள்‌ சேர்க்கை ஆணை பெற்றிருக்கிறார்கள்‌. பிப்ரவரி 17 ஆம் தேதி வரையிலான தரவுகளின் படி 6,100 மாணவர்களுக்கான கட்டணமாக 38 கோடியே 31 இலட்சம்‌ ரூபாய்‌ விடுவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ பல்வேறு பொதுநல வழக்குகள்‌ தொடரப்பட்டு, இருதரப்பு வாதங்களும் முடிவுற்று, இன்று நமக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த மாமன்ற உறுப்பினர்களுடன்‌ பகிர்ந்து கொள்ளவதாக முதலமைச்சர் பேசினார்.

இந்த வரலாற்றுச்‌ சிறப்புமிக்க தீர்ப்பு, தரவுகளின்‌ அடிப்படையிலும்‌, முறையான கலந்தாலோசனை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட முன்னுரிமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு உயர்‌ நீதிமன்றம்‌ தந்துள்ள மிகப்‌ பெரிய அங்கீகாரம்‌ என்றும்  இந்த அரசு ஆட்சிப்‌ பொறுப்பேற்று 10 மாத காலத்தில்‌, சமூக நீதிக்கான சட்டப்‌ போராட்டத்தில்‌ கிடைக்கும்‌ மூன்றாவது வெற்றி இந்தத்‌ தீர்ப்பு என்பதைப்‌ பெருமையுடன்‌ பதிவு செய்கிறேன் என்றும் அவர் பேசினார்.  சமூக நீதியை மக்கள்‌ மன்றத்திலும்‌, நீதிமன்றத்திலும்‌ நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும்‌ வரலாற்றுக்‌ கடமையை தமிழகம்‌ தொடர்ந்து செய்திடும்‌ எனவும்
திராவிட மாடல்‌ ஆட்சி, அதற்காக அயராது உழைத்திடும்‌ எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!