குற்ற பின்னணி உள்ளவர்கள்தான் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ளனர். குற்ற வழக்குகள் கொண்ட பாஜக எம்.பி.க்கள் குறித்து பிரதமரிடம் கேட்க அமித்ஷாவிற்கு தையரிம் உண்டா?
திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு 70 வயது ஆனாலும் தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு 70 வயது ஆனாலும் தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன். 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்தியது உதயநிதியின் சாதனை. 2019ல் உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை எதிரிகளால் இப்போதும் மறக்க முடியவில்லை. கட்சிப் பணி, ஆட்சிப் பணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து திமுக ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறார் உதயநிதி.
இதையும் படிங்க;- "தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கவே இந்த பாதயாத்திரை" - என் மண் என் மக்கள் நிகழ்வில் பேசிய அமித் ஷா!
பாத யாத்திரையை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழக வந்தார். அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல, அது பாவ யாத்திரை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் தான் பாத யாத்திரை தொடக்கம். மணிப்பூருக்கு சென்று ஏன் அமைதி யாத்திரையை தொடங்கி வைக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் மனதில் இருந்து பெரியார், அண்ணா திராவிட கருத்தியல் மறைந்துவிடும் என நினைத்த எதிரிகளின் ஆசையில் மண் விழுந்துவிட்டது. சுயமரியாதையும், பகுத்தறிவும் உடைய சமூகமாக மாற்றிய திராவிடத்தின் வாரிசுகளாக நாம் இருக்கிறோம். நமது எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறாரோ நாமும் அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க;- உங்க மகன் எப்படி பிசிசிஐ தலைவரானார்? எத்தனை மேட்ச் விளையாடி இருக்காரு! அமித்ஷாவையே அலறவிடும் உதயநிதி.!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித் ஷா பேசியுள்ளார். குற்ற பின்னணி உள்ளவர்கள்தான் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ளனர். குற்ற வழக்குகள் கொண்ட பாஜக எம்.பி.க்கள் குறித்து பிரதமரிடம் கேட்க அமித்ஷாவிற்கு தையரிம் உண்டா? பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்கத் துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பாட்னா, பெங்களூரு கூட்டங்கள் வெற்றி பெற்றதை பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே நமது தேர்தல் முழக்கம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.