ஆளுநரையே முதலமைச்சர் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநரையே முதலமைச்சர் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் திமுக கூட்டணி கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். இருந்த போதிலும் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார். இதை அடுத்து அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: இந்த ஆட்சியில் தான் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்... சசிகலா அதிரடி கருத்து!!
அதைத்தொடர்ந்து ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்னும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆளுநரையே முதலமைச்சர் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சம்பவம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஜன.20 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்... அறிவித்தார் கே.பாலகிருஷ்ணன்!!
பொதுவாக தனது பதில்கள் மற்றும் அறிவிப்புகளால் எதிர்க்கட்சிகளை தான் ஆளுநர் ஓடவிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்று ஆளுநரையே முதலமைச்சர் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறார். அத்தகைய முதலமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார். அவர் தினமும் மக்களுக்கான பணிகளையும், திட்டங்களையும் கொண்டு வருகிறார். அதேநேரம் நமது உரிமைகள் பறிபோனால் குரல் கொடுக்கும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது ஸ்டாலின் தான் என்று தெரிவித்துள்ளார்.