திமுகவினரை பார்த்து பயப்படும் நிலையில் முதல்வர்.. போற போக்கில் வாரிசு அரசியலை விளாசிய கடம்பூர் ராஜூ..!

By vinoth kumar  |  First Published Nov 28, 2022, 8:27 AM IST

அதிமுக, திமுக என்பது அப்படையிலேயே வேறு. அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே ஒருபோதும் இடமில்லை. திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படும் கட்சி.


திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம். உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை தாங்கும் நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ;- திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம். உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை தாங்கும் நிலை உள்ளது. திமுகவினரை பார்த்து பயப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். வாரிசு அரசியலை எதிர்த்து துவக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. உழைக்கின்ற தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வரமுடியும்.

Latest Videos

இதையும் படிங்க;- ஆற்காடு வீராசாமி கூறியது போல் சொல்லக்கூடிய சூழ்நிலை செந்தில் பாலாஜிக்கு விரைவில் வரும்.. கடம்பூர் ராஜூ ..!

எம்ஜிஆர் தந்த இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. அதிமுக அமைப்பு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளார். இந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும். 

அதிமுக, திமுக என்பது அப்படையிலேயே வேறு. அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே ஒருபோதும் இடமில்லை. திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படும் கட்சி. பாஜகவோடு கொள்கையில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. பாஜகவுடனான கூட்டணி என்பது வேறு. கொள்கை வேறு. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டால் நாங்கள் போராடுவோம் என கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- Kadambur Raju: அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு ஒருபோதும் இடமில்லை.. கட்டன் ரைட்டாக கூறிய கடம்பூர் ராஜூ..!

click me!