தவறான பாதையில் பயணிக்கும் திமுக..! தமிழகத்தில் 5000 இடங்களில் போராட்டம் நடத்த இலக்கு - அண்ணாமலை உறுதி

By Ajmal Khan  |  First Published Nov 28, 2022, 8:07 AM IST

பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின. அடுத்து நடத்தப்போகும் போராட்டம் 5000 இடங்களில் இருக்க வேண்டும் என கட்சியினரிடம் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் சுற்றுபயணம்

பான் இந்தியா அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. 16 நாட்கள் பயணமாக 6000 கிலோ மீட்டர் தூரம் சென்று, 9 மாநிலங்களில் பேரணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி வெற்றிகரமாக நிறைவு செய்தததை முன்னிட்டு, அதன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் சுற்றுப்பயணம் குறித்த திட்டமிடுதலை ஆரம்பித்திருப்பதாக கூறினார். அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் எந்த அளவு கிராமங்களைச் சென்றடைந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும் என கூறினார்.

Tap to resize

Latest Videos

அமைச்சரவையில் மாற்றமா..? உதயநிதிக்கு வாய்ப்பா..? மா. சுப்பிரமணியன் கூறிய புதிய தகவல்

ராணுவ வீரருக்கு மிரட்டல்

ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரி செய்து கொடுக்க வேண்டும். இது போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பராகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறினார். ராணுவ வீரரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மிரட்டியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், , “தமிழகத்தில், வெறும் பெயருக்காக இருக்கும் அரசியல் கட்சிகள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரரின் குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். அந்த ராணுவ வீரரிடம், எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய பாஜக கடமைப்பட்டிருக்கிறது. பாஜக உங்களுக்கு துணையாக இருக்கும் என்று அவருக்கு தைரியம் கொடுத்துள்ளதாக கூறினார்.

அதிமுகவை பலவீனப்படுத்தியதே ஓபிஎஸ்,ஈபிஎஸ் தான்..! டிடிவி தினகரன் திடீர் பாய்ச்சல்

5000 இடங்களில் போராட்டம்

திமுக அரசின் செயல்பாட்டில் ஒவ்வொரு நாளும் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது என கூறினார். திமுக தனது செயல்பாட்டில் இருந்து  மாறியதாகத் தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின. அடுத்து நடத்தப்போகும் போராட்டம் தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் இருக்க வேண்டும் என கட்சியினரிடம் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

இங்கே பாருங்க.. தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் ஆளுநரே பொறுப்பு.. பொங்கும் அன்புமணி ராமதாஸ்..!

click me!