மாரப்படைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran S  |  First Published Feb 20, 2023, 8:41 PM IST

கரூரில் மாரப்படைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


கரூரில் மாரப்படைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குளித்தலை வட்டம் குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டிக்கு சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் சிறிது நெஞ்சு வலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏபிவிபி – எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் மோதல் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து… டிவிட்டரில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!!

Tap to resize

Latest Videos

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இதையும் படிங்க: வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாக அதிமுக கூறுவது பொய்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து!!

உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!