
நீங்க "SHUT UP" பண்ணுங்க போதும்...! அமைச்சர்களுக்கு இறுதி எச்சரிக்கை -டென்ஷனில் முதல்வர்..!
முதல்வர் "அப்செட்"..! மந்திரிகளின் வாயால் வந்த வினை...!
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த போது, அவரை உண்மையில் யார் தான் பார்த்தார்கள் என்ற சந்தேகத்தை அதிகப் படுத்தும் விதமாக,அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதில், தொடக்கமே திண்டுக்கல் சீனிவாசன் தான்.. அதாவது மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், 'மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பின், அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் கூறியதை நம்பி, ஜெ., இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என, பொய் கூறினோம். அதற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.
அதேபோல, அமைச்சர் வீரமணியும் வேலுார் மாவட்டம், சோளிங்கரில் நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில், ''ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் குணமாகி வந்ததும், சசிகலா குடும்பத்தினர், ஏதேனும், 'போட்டு' கொடுத்து விடுவர் என பயந்து, அவர்கள் கூறிய பொய்யை வெளியில் தெரிவித்தோம்,'' என்றார். சென்னையில், அமைச்சர் ராஜு கூறுகையில், ''மருத்துவமனையில், ஜெ.,யை அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம். தாயை இழந்த துக்கத்தில் இருக்கிறோம் என்பதால், அவர் இறப்பு குறித்து, விமர்சிக்க தயாரில்லை,'' என்றார்.
நிலோபர் கபில்,டில்லியில், நேற்று அளித்த பேட்டியில், ''ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அமைச்சர்கள் குழுவாக சென்று பார்த்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, வார்டுக்கு மாற்றும் போது, ஜெ.,யை பார்த்தேன், 'என்றார்.
விசாரணை கமிஷன்
இப்படி அமைச்சர்கள் மாறி மாறி பேசி முதல்வருக்கு சில நெருக்கடியை ஏற்படுத்தி விட்டனர்.இதற்கிடையில்,ஜெ மரணம் குறித்து தனி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.எனவே இனி யாரும் வாயை திறக்க வேண்டாம் என முதல்வர் கடுப்பாகி உள்ளாராம்.
இதற்கிடையில், சென்னையில், அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, நீதிபதி நியமிக்கப் பட்டுள்ளார்.எனவே, எவ்வித கருத்தும் கூறஎனக்கு விருப்பம் இல்லை என வாயை மூடிக்கொண்டு அமைதியாக சென்றுவிட்டார்