நாராயணசாமி தப்பவே முடியாது.. நிச்சயம் வாக்களிப்போம்... நியமன எம்.எல்.ஏ சாமிநாதன்..!

By vinoth kumarFirst Published Feb 19, 2021, 12:37 PM IST
Highlights

நியமன எம்.எல்.ஏக்களை பாஜக உறுப்பினர்கள் என்று தான் அழைத்தார்கள். பெரும்பான்மை விவகாரத்தில் மட்டும் கட்சியை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சாமிநாதன் கூறியுள்ளார்.

நியமன எம்.எல்.ஏக்களை பாஜக உறுப்பினர்கள் என்று தான் அழைத்தார்கள். பெரும்பான்மை விவகாரத்தில் மட்டும் கட்சியை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சாமிநாதன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பிப்ரவரி 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் அம்மாநில முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதனிடையே, நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரை பாஜக எம்.எல்.ஏக்கள் என ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறிகையில்;- 3 நியமன எம்.எல்.ஏக்களைக் கட்சி ரீதியிலான எம்.எல்.ஏக்கள் என எடுத்துக்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களைப் பாஜகவினர் என சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்கள் வாக்களிக்க உரிமை உள்ளது என நீதிமன்றம் கூறினாலும், அவர்களைப் பாஜகவினர் என ஆளுநர் குறிப்பிடுவது தவறு' எனத் தெரிவித்திருந்தார். 

மேலும், நியமன எம்.எல்ஏக்களைக் கட்சி சார்பில் குறிப்பிட்டால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்யவும் சட்டத்தில் வழிவகை உள்ளது எனவும் புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியிருந்தார். 


 
இந்நிலையில், நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் ெசய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நாராயணசாமி தப்ப முடியாது. நியமன எம்.எல்ஏக்களான நாங்களும்  நிச்சயம் வாக்களிப்போம். புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களான எங்களைப் பாஜக உறுப்பினர்கள் என்றுதான் அழைத்தார்கள். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது மட்டும் கட்சியைக் கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

click me!