1.06 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை.. அமெரிக்கா 60 நாளில் செய்ததை 32 நாளில் செய்த இந்தியா.

By Ezhilarasan BabuFirst Published Feb 19, 2021, 12:18 PM IST
Highlights

அதன்படி இதுவரை 1,06,56,845  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா  பரவல் வேகம் என்பது  படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,000 என்ற அளவில் உள்ளது, 

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை இந்தியா 1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. உலக அளவில் வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பூசி அதிகம் பேருக்கு செலுத்திய  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்து  இந்தியா மூன்றாவது இடம்பிடித்துள்ளது. 

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 180-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பாதித்த நாடுகளில் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, இதுவரை இந்தியாவில் 10,963,  394 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 56 ஆயிரத்து 123 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 10, 667,741 பேர் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மீட்டுள்ளனர். இதுவரை தொடர்ந்து மருத்துவமனையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கோவிஷியல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து, இந்தியா அதை இலவசமாக மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளது.  முதற்கட்டமாக களத்தில் உள்ள முன் களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தத்தில் முதற்கட்டத்தில் 3 கோடி பேருக்கும்,   இரண்டாவது கட்டத்தில் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நோய்த்தொற்று விகிதம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி இதுவரை 1,06,56,845 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா  பரவல் வேகம் என்பது  படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,000 என்ற அளவில் உள்ளது, அதேபோல் நாடு முழுவதும் வைரஸிலிருந்து குணமடைவார்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 97 பேர் பலியாகியுள்ளனர்.  அதேபோல் தொற்றிலிருந்து ஒரே நாளில் 10 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தத்தில் குணமடைந்தவர்களின்  விகிதம் 98.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

உயிரிழந்தோர் விகிதம் 1.42 சதவீதமாக குறைந்துள்ளது, சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.27  சதவீதமாக குறைந்துள்ளது. மொத்தத்தில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதிலிருத்து நேற்று வரை நாடு முழுவதும் 1,06,56,845 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் சுமார் 6,58,674 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  குறிப்பிடதக்கது. அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள் 60 நாட்களில் செய்த இந்த சாதனையை இந்தியா வெரும் 31 நாட்களில் எட்டியுள்ளது. இதுவரை “62,34,635 சுகாதாரப் பணியாளர்கள் முதல் டோஸ்சும், சுமார் 4 , 64,932 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 

click me!