தடம் மாறும் தமிழக அரசியல்.. தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published Jul 11, 2021, 11:52 AM IST
Highlights

கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த்  வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தேமுதிக தலைவர் மற்றும் பொதுச்செயலாளரான விஜயகாந்த் உடல்நலம் பாதிப்பால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சட்டப்பேரவை தேர்தலின் போதும் பிரசாரம் செய்யாமல் பொதுமக்களை மட்டும் சில இடங்களில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அப்போது, கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த்  வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.

உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் முதல்முறை எம்.எல்.ஏவாக பதவியேற்றதை அடுத்து, விஜயகாந்தை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!