திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது முதல்வருக்கே தெரியும் - குஷ்பு விளாசல்

By Velmurugan s  |  First Published Jan 20, 2024, 1:30 PM IST

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், முதல்வருக்கும் கூட தெரியும் என பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ விமர்சித்துள்ளார்.


கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலை சுத்தப்படுத்தும் பணியை நடிகையும், பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ மேற்கொண்டார். முன்னதாக பெருமாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கோவில் வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.

Latest Videos

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ பேசுகையில், கோவிலை சுத்தம் செய்வது புதிதல்ல. ஒவ்வொரு பகுதியிலும் கோயில்களை சுத்தம் செய்தால் நம்மை பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்ய வருவார்கள். இன்றைக்கு நாட்டில் கோயில்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம். நம் கலாசாரம், நம் பாரம்பரியம் அது தான். மோடி அதை துவக்கி வைத்தார். ஸ்வச் பாரத் ஏற்கனவே இருக்கிறது. கோயிலில் பல இடங்களில் அசுத்தமாக இருக்கிறது. கோயிலை சுத்தமாக வைத்தால் நாம் கோயிலுக்கு போகும் போது நிம்மதி கிடைக்கும்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு நிறைய வேலை இருக்கிறது.  ஆனால் உண்மையில் நம் நாட்டில் பல ஆண்டுகளாக, 500 ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.  ராமர் மறுபடியும் வரமாட்டாரா என்று காத்திருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராமரை மறுபடியும் ஒரு இடத்தில் பார்க்க போகிறோம். ரொம்ப பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது. 

திருச்சியில் மாஸ் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி; தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு

ராமர் கோயிலை பொறுத்தவரை சாதி, மதம் கிடையாது. முழுக்க முழுக்க நம் ஒற்றுமையை காட்ட தான் மந்திரம் சொல்கிறோம். அயோத்தியில் இந்து, முஸ்லிம் என எல்லா மதத்தினரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமரை வரவேற்க காத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் இதை கொண்டாடுகிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். 

ஆளும் கட்சியான திமுகவினர் வீட்டிலேயே  உள்ள சிறுமிக்கு கொடுமை நடந்திருக்கிறது. ஆளுங்கட்சியினர் வீட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால்,  தமிழ்நாட்டில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுகவிற்கு மட்டும் இன்றி இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும். கருணாநிதி பிரச்சினையை பார்த்து விட்டும் எந்த வித நடவடிக்கை எடுக்க போகிறார்? அவர்கள் கட்சியினர் வீட்டிலேயே ஒரு பெண்ணுக்கு கொடுமை நடந்திருக்கிறது. முதலமைச்சர் இதை பற்றி எதுவும் பேசினாரா? ஆறுதல் சொன்னாரா? நான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று எதுவும் சொன்னாரா? 

ஜல்லிக்கட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்; அரசியலாக்கக் கூடாது - அலங்காநல்லூரில் 2ம் பரிசு பெற்ற வீரர் கருத்து

இன்றைக்கு பாஜக தமிழகத்தில் வளர்ந்து இருக்கிறது. வெற்றி பெறுபவர்கள் பட்டியலில் பாஜக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்கட்சி என்றாலே பாஜக என்று பார்க்கிறார்கள். தமிழகத்தில் மிக பெரிய இடத்தில் பாஜக உள்ளது. அண்ணாமலை ஒவ்வொரு விஷயம் சொல்லும் போதும் எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். 

கட்சியை பொறுத்தவரை எங்கள் விருப்பம், 2024 ல் மிகப்பெரிய வெற்றி பாஜகவுக்கு காத்திருக்கிறது. அதற்கு எங்களால் எந்த அளவுக்கு உழைக்க முடியுமோ உழைப்போம். 400 இடங்களை தாண்டி பாஜக வெற்றி பெற்றிருக்கும். மோடி மீண்டும் வருவார். யார் எங்கே போட்டியிட வேண்டும் என்று மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

click me!