குவாட்டர், பிரியாணி,காசு கொடுத்தாலும் கூட்டம் சேர்க்க முடியவில்லை…ரத்தான எடப்பாடியின் விழா…

Asianet News Tamil  
Published : Mar 10, 2017, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
குவாட்டர், பிரியாணி,காசு கொடுத்தாலும் கூட்டம் சேர்க்க முடியவில்லை…ரத்தான எடப்பாடியின் விழா…

சுருக்கம்

CM meeting cancel

குவாட்டர், பிரியாணி,காசு கொடுத்தாலும் கூட்டம் சேர்க்க முடியவில்லை…ரத்தான எடப்பாடியின் விழா…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக இருந்த ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொது மக்கள் வரமாட்டார்கள் என உளவுத்துறை அளித்த தகவலால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்களுக்கு குவாட்டர், பிரியாணி, பணம் கொடுத்து ஆள் சேர்ப்பதில்   அதிமுக வல்லவர்கள் என்பது உலகமே அறியும். அதுவும் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டம் என்றால் சொல்லவே வேண்டாம். லட்சக்கணக்கில் ஆட்களை திரட்டி விடுவார்கள். ஜெயலலிதா இருந்தவரை அந்த முறை ஒர்க்அவுட் ஆனது. ஆனால் இப்போ அப்படி இல்லை.

கடந்த சில நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும் பொது மக்கள் சொற்ப அளவிலேயே உள்ளனர். கடந்த 8 ஆம் தேதி மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, பொது மக்களின் கூட்டமே இல்லாததால் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

அதுவும் மதுரையில் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் இருந்தும், பிரியாணி, குவாட்டர் மற்றும் பணம் வழங்கியும் அவர்களால் கூட்டத்தை சேர்க்க முடியவில்லை.

இந்நிலையில் சேலத்தில் நாளை நடைபெறவிருந்த ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் முதலமைச்சர் பங்கேற்க உள்ள விழாவிற்கு கூட்டம் சேராது என்றும், சொற்ப அளவிலேயே பொது மக்கள் வருவார்கள் என்றும் உளவுத்துறை எச்சரித்தது.

இதையடுத்து சேலத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!