எடப்பாடியை கட் பண்ணு! ரஜினியை லைவ் பண்ணு! அதகளம் பண்ணிய ஊடகங்கள்! அதிருப்தியில் சி.எம் ஆபிஸ்!

By vinoth kumarFirst Published Oct 21, 2018, 9:59 AM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கடந்த வாரம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்தார். விழுப்புரம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போது சி.பி.ஐ வழக்கை எதிர்கொள்ள தயார் என்று அறிவித்ததோடு எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு சென்று இருந்தார். அங்கு ஓமலூரில் முதலமைச்சரின் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் சேலத்தில் இருந்து தமிழ் செய்தி சேனல்கள் அனைத்தும் தங்களது லைவ் வெகிகிள் மற்றும் லைவ் பேக்குகளை ஓமலூருக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தன. காலை 11.45 மணி அளவில் சரியாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது தன் மீது ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். மேலும் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எவ்வித முறைகேடும் இல்லை என்பதற்கும் விரிவாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சரியாக 11.50 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை விமானநிலையத்திற்கு வந்திருந்தார். 

அவரும் செய்தியாளர்களை சந்திக்க முன்னனி தொலைக்காட்சிகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் செய்தியாளர் சந்திப்பை உடனடியாக கட் செய்தன. மேலும் ரஜினியின் பேட்டியை நேரலையாக ஒளிபரப்ப ஆரம்பித்தன. ரஜினி பேட்டி கொடுத்துவிட்டு சென்ற பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் பேட்டியை நேரலையாக கொடுக்க ஆரம்பித்தன. 

என்ன தான் ரஜினி பிரபலமானவராக இருந்தாலும் முதலமைச்சர் ஒருவரின் பேட்டியை கட் செய்துவிட்டு அவரது பேட்டியை எப்படி ஒளிபரப்பலாம் என்று பி.ஆர்.ஓக்கள் பலரும் செய்தி தொலைக்காட்சிகளின் நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு காய்ச்ச ஆரம்பித்துவிட்டனர். மேலும் இதே போல் முதலமைச்சரை அவமதிப்பது போல் இனியும் நடந்து கொண்டால் எந்த சலுகையையும் எங்களிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளும் ஊடக அதிபர்களை தொடர்பு கொண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

click me!