37 அதிமுக எம்.பி.க்கள் விவகாரம்... பிரேமலதாவை தூக்கி பிடிக்கும் எடப்பாடி...!

By vinoth kumarFirst Published Mar 10, 2019, 10:12 AM IST
Highlights

தேமுதிக ஒண்ணும் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை, ஊடகங்கள் மட்டுமே அப்படி பேசுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேமுதிக ஒண்ணும் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை, ஊடகங்கள் மட்டுமே அப்படி பேசுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று முன்தினம் தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அதிமுக தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்துக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரேமலதா தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஒரு பிரதமரை அறிவித்து, அந்த கூட்டணி இடம்பெற்று அதில் வெற்றி பெற்றிருந்தால் தேவையானதை வாங்கியிருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கிறார். 

மேலும் அவர் கூறியிருக்கிற கருத்தின் கருவை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பிரதமர் இல்லாத காரணத்தினால், கூட்டணி அமைத்து போட்டியிடாததால் இத்தனை உறுப்பினர்கள் வெற்றி பெற்றும் தேவையான திட்டங்களை பெற முடியவில்லை. மாநிலத்தில் ஆளுகின்ற கட்சி வேறு கட்சி, மத்தியில் ஆளுகின்ற கட்சி வேறு கட்சி. இப்படிபட்ட சூழ்நிலை என்பதனால் தான் 37 மக்களவை உறுப்பினர்கள் இருந்தும் தேவையானது கிடைக்கவில்லை என்று முதல் விளக்கமளித்துள்ளார். 

தேமுதிகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேமுதிகவுடன் நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் கிடையாது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால் அவசரம் தேவையில்லை என்றார்.

click me!