
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரில் கோயிலில் அர்ச்சனை செய்யப்படுவது போன்ற வீடியோ நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதேபோன்ற மேலும் ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழக திரையரங்களில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு
அர்ச்சனை செய்யுங்கள் என்று ஒரு பெண் கூறுகிறார். மேலும் திருப்பதி ஏழுமலையான் உருவத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவம் தெரிவது போலவும் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்பப் எழுந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. அது மட்டுமல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் வெளியாகின.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட விளம்பரம் நீக்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். ஆனால் இதேபோன்று வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். அதில், உடல் ஊனமுற்ற ஒரு வாலிபர் தனக்கு வேலை கொடுத்த முதலமைச்சர் பழனிச்சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்வது போலவும், அதனை ஏற்று அய்யர் அர்ச்சனை செய்வது போலவும் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.