சாலையை கடக்க முயன்ற இளைஞரை அடித்து தூக்கிய மாநகர பேருந்து.. ஸ்பாட் அவுட்.. டிரைவர் கைது.

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2021, 3:57 PM IST
Highlights

சென்னை வள்ளலார் நகர் பகுதியிலிருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய 37 எண் கொண்ட பேருந்தானது நேற்றிரவு 8 மணியளவில் வளசரவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது.

வளசரவாக்கத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது மாநகர பேருந்து மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் ஓட்டுனரை கைது செய்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளலார் நகர் பகுதியிலிருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய 37 எண் கொண்ட பேருந்தானது நேற்றிரவு 8 மணியளவில் வளசரவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. 

அப்போது பாதசாரி ஒருவர் வளசரவாக்கம் டிரங்க் ரோடு மதுரை கண்ணப்பர் ஓட்டல் அருகே சாலையை கடக்கும் போது திடீரென்று வேகமாக வந்த அப்பேருந்து அந்த நபர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் இறந்த நபர் டிங்கரிங் பணி செய்து வரக்கூடிய போரூர் வன்னியர் தெருவை சேர்ந்த சதீஷ்(34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து மாநகர பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா(29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

click me!