விபூதி பூசாத கிறிஸ்தவ அமைச்சர் கோவிலுக்குள் வரக்கூடாது.. கொதிக்கும் பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி.

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2022, 12:25 PM IST
Highlights

விபூதி பூசாத கிறிஸ்தவ அமைச்சர் இந்துக் கோவிலுக்குள் வரக்கூடாது என பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்து அமைச்சர்கள் தேர்வடம் பிடிக்க வந்தால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விபூதி பூசாத கிறிஸ்தவ அமைச்சர் இந்துக் கோவிலுக்குள் வரக்கூடாது என பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்து அமைச்சர்கள் தேர்வடம் பிடிக்க வந்தால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவையொட்டி அங்கு தேர் வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் சென்று இருந்தார், அப்போது அவருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது புது சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் அமைச்சர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்க சென்றபோது பாஜகவின் திட்டமிட்டு அமைச்சரை அவமானப்படுத்தும் நோக்கில் இப்படி நடந்து கொண்டதாக ஆளும் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ எம் ஆர் காந்தி இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார், அதன் விவரம் பின்வருமாறு:-  இந்து தெய்வங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து தெய்வங்களை வழிபடுபவர்கள் இந்து ஆலயங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து கோயிலுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கோவில் நிகழ்ச்சிகளில் அவர்கள் தலைமை ஏற்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ளவே மாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலின் தங்கள் கட்சியில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் இருப்பதாக கூறுகிறார், அவர்களுடைய அமைச்சரவையிலும் இந்துக்கள் இருக்கலாம், அப்படியிருக்கும்போது  இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை ஏன் அவர் ஆலயத்திற்கு அனுப்பக்கூடாது.

மாற்று மதத்தைச் சேர்ந்தவரை குங்குமம் திருநீறு வைக்காத ஒரு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரை ஏன் கோவிலுக்கு வடம் பிடித்து இழுக்க அனுப்பவேண்டும் இதுபோன்ற இந்துத் திருவிழாக்களில் கலந்து கொள்ள அவர்களது கட்சியின் தகுதியுடையவர்கள் இல்லையா? திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்பதை காட்டி கொள்வதற்காகவாவது இந்து ஆலயங்களுக்கு இந்து அமைச்சர்கள் பங்கெடுக்க வேண்டும், இந்துக்களின் மத வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களை இந்துக்களின் திருவிழாக்களில் முன்னிலைப்படுத்த கூடாது, வேண்டுமென்றே அவர்கள் இந்தத் திருவிழாவிற்கு தலைமை தாங்க வந்துவிட்டு நாங்கள் தடைசெய்வதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துக்களின் உரிமைகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை.

அவருக்கு எதிர்ப்பு கிளம்பியபோதே அவர் வராமல் இருந்திருக்க வேண்டும். அது அவரது பெருந்தன்மையை காட்டியிருக்கும், இந்த எதிர்ப்பு போராட்டம் என்பது பாஜகவின் திட்டம் அல்ல, இது பக்தர்களின் முடிவு. இனியாவது இதுபோன்ற பிரச்சனைகள் நடக்காதவாறு கோவில் திருவிழாக்களுக்கு இந்து அமைச்சர்களை அனுப்பி வைக்கவேண்டும். நாங்கள் கோவிலுக்கு வர கூடாது என்று சொல்லவில்லை தலைமை ஏற்க கூடாது என்றுதான் சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!